நிறைவான ஆளுமை ஓய்வுபெற்ற கல்வியதிகாரி மர்ஹ_ம் அல்-ஹாஜ். ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலவானா.


கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனையின் மூத்த கல்விமான்களில் ஒருவரும்,சமூக சேவையாளருமான ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்கள் மரணித்து 2019-02-25ஆம் திகதியுடன் ஆறு வருடங்கள்; நிறைவடைகின்றது.இதனையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
1920.12.31ஆம்; திகதி மருதமுனையில் மௌலானா வம்சத்தில் பிறந்த இவர் 1913-02-25ஆம் திகதி காலமானார்.பழீல் மௌலானா மரணித்து 06 வருடங்கள் கடந்த நிலையில் மருதமுனையின் சிரேஷ்ட பிரஜைகளுள் ஒருவராக இன்றும் இவர் நினைவுகூறப்டுகின்றார்.

மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம்களான மௌலவி செய்யிது ஐதுறுஸ் மௌலான, ஆயிஷா உம்மா ஆகியோரின் புதல்வாரன் பழீல் மௌலானா தனது ஆரம்பக்கல்வியை மருதமுனை அல்மனார் வித்தியாலயத்திலும்,பின்னர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்று ஆசிரியராக,அதிபராக,வட்டாரக் கல்வி அதிகாரியாக பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.பொலன்னறுவை, கேகாலை,அனுராதபுரம்,புத்தளம்,குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கல்விப் பணியாற்றியுள்ளார்.

1940ஆம் ஆண்டு தொடக்கம் 1943ஆம் ஆண்டு வரை அல்மானாரில் அதிபராகப் பணியாற்றி மருதமுனைக்கு மகத்தான சேவை செய்தார்.கல்எலிய மாணவர் சமூகத்தால 1965ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிரிய மாமணிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவார்.அனுராதபுரம் கொட்டியாவ கிராமப்புற மக்களால் 1985 காலப்பகுதியில்~~நுறாணியா மௌலானா||என்ற பட்டம் சூட்டி வாழ்த்தப்பட்டார்.

1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து மருதமுனை ஷம்சுல் இல்ம் வித்தியாலயம் மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்ட போது அதன் முதல் அதிபராக 1979 தொடக்கம் 1981 வரை சிறப்பாக பணி செய்து அங்கேயே ஓய்வு பெற்று ஷம்ஸ் பாடசாலை சமூகத்தால் பாரிய பிரியாவிடை வைபவம் நடாத்தி கௌரவிப்பு செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற பின்பும் ஓயாமல் பணி செய்வதற்காக அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக்கல்லூரியில் 08 வருடங்களும்,அக்கரைப்பற்று மன்பஉல் ஹைறாத் அரபுக்கல்லூரியில் 06 வருடங்களும் நிருவாக செயலாளராக செயற்பட்டு அரபுக்கல்லூரி சார்ந்த மௌலவி மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.மர்ஹ{ம் சின்னலெப்பை ஹாஜி உம்மு ஆமீனா இவரது மனைவியாவார்.

இவர் பெற்ற பட்டங்களும் சேவைகளும்
1960ஆம் ஆண்டு; புத்தளம் மீலாத் விழாவில் ஆற்றொழுக்காக பேசியமைக்காக அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜாமியா நளீமியாவின் ஸ்தாபகர், எம்.ஐ.நளீம் ஹாஜியாரால் அபுல்கலாம் ~~பேச்சின் தந்தை|| என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.1983ல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிதியமைச்சால் சமாதான நீதிபதி என்ற கௌரவ நியமனம் வழங்கப்பட்டது.

கிழக்குப் பிராந்திய போக்குவரத்து சபையின் தவிசாளராக 1985ல் அன்றய அமைச்சர் எம்.எச்.முகம்மது அவர்களால் கௌரவ நியமனம் வழங்கப்பட்டது.மரைக்காயர் மஸ்ஜிதுல் கபீர் ஜும்மாப்பள்ளிவாசலில் கால் நூற்றாண்டாக மரைக்காயராகவும், நம்பிக்கையாளராகவும் (வுசரளவநந) இருந்து சமயப்பணி செய்ததோடு 1976ல் அந்த மஸ்ஜிதின் புணர்நிர்மாணப்பணியில் அன்றைய தலைவர் அல்-ஹாஜ் ஏ.பி.எம்.மரைக்காரோடு இணைந்து செயற்பட்டார்.

1983ல் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவில் மஸ்ஜிதுல் மினன் என்ற பெயரில் ஒரு பள்ளிவாசல் உருவாக முன்னோடியாகத் திகழ்ந்ததோடு அதன் ஆயுட்கால ஆலோசகராக இருந்து செயற்பட்டார். அல்-குர்ஆன் ஞானமணிக் கோவை நூலாசிரியர். இவரது மேற்படி நூலை மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம் 1993ஆம் ஆண்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹதீஸ் தொகுப்பு முயற்சிகளில் ஈடுபாடு காட்டிய போதிலும் அவை இன்னும் அச்சேறவில்லை.தேசிய பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கவிதைகள், வாழ்த்துப்பா மற்றும் செய்தி, கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -