பெருந்தோட்ட பிராந்தியத்தின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அங்குரார்ப்பண நிகழ்வு

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் பெருந்தோட்ட பிராந்தியத்தின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அங்குரார்ப்பண நிகழ்வும் சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினர் நியமனம் வழங்குதலும் 07-02-2019 திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH ) இடம்பெற்றது. சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.

இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன், விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தக் குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, அமைச்சின் செயலாளர் காலாநிதி பொ. சுரேஸ், அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -