எமது தேசத்தில் மிகவும் அபாயகரமாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமற் செய்வதற்கு இலங்கை இராணுவத்தினர் முன்வரவேண்டும் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடைசெய்வதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படைகள் அர்ப்பணிப்போடு செயற்பட்டாலும் அதை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு முடியாதுள்ளது. ஏனென்றால் கடமையில் ஈடுபட ஆளணிப் பற்றாக்குறை ஒரு காரணமாகவுள்ளது.
இலங்கை மக்கள் இன்று நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு இலங்கை இராணுவத்தினர் அவர்களால் முடிந்த பங்களிப்புக்களைச் செய்து நம் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் அவர்களை இதில் பொறுப்பாக்கி அவர்களை இவ் போதைப்பொருள் பாவனைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு அரசு இராணுவத்தினர்களை நியமிக்க வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் சார்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் போதைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.