வலதுகுறைந்தவா்களுக்கான ஆசிய விளையாட்டுப்போட்டியின்போது 100 மீட்டா் 200 மீட்டா் உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட புத்தளம் மதுரங்குலியில் வசிக்கும் அமில வர்ணகுலசூரிய பிரசாத்துக்கு மொரட்டுவையில் உள்ள வீடமைப்புத் திட்டத்தில் வீடொன்றினை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று(7 ) அமைச்சில் வைத்து வழங்கி வைத்தாா்.
இவ் வீட்டின் பெறுமதி 30 இலட்சம் ருபாவாகும். அவா் தான் குடும்பத்துடன் வீடொன்று இல்லாமல் வாழ்ந்து வருவதையும் தனக்கு ஒரு வீடொன்றினை வழங்குமாறு அண்மையல் அமைச்சா் சஜித் பிரேமதாசவுக்கு அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.