சமூக விஞ்ஞான மானுடவியல் பீடத்தில் ஜப்பான் மொழி பிரிவுக்கு மானிய உதவி

லங்கையின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மானுடவியல் பீடத்தில் ஜப்பான் மொழி (ஆய்வுகூட) பிரிவுக்கு 12 மில்லியன் பெறுமதியான மானிய உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் பிரஸ்தாப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று (27) நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, ஜப்பான் தூதரக கலாசார பிரிவின் தலைமை அதிகாரி காவாக்காமி ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர். இலங்கையில் பத்தாயிரம் பேர் ஜப்பான் மொழியை கற்கின்றனர். களனி, சப்ரகமுவ, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -