நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 03.02.2019 அன்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரயிலின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டுள்ளது.
26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.