காரைதீவு நிருபர் சகா-
இலங்கையில் மாட்டிறைச்சியைத் தடைசெய்யவேண்டும் அது மிருகவதை என்று பேரினவாதிகள் குரலெழுப்பி ஓய்ந்திருக்கின்ற இவ்வேளையில் எமது சபைச் சொல்லாடல்களை அவர்கள் அறிந்தால் சிலிர்த்தெழும்புவார்கள்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ. ஆர். முஹம்மட் பஸ்மீர் தெரிவித்தார்.
இறுதியாக நடந்த காரைதீவு பிரதேசசபையில் முஸ்லிம் உறுப்பினர்களிடையே மடுவம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உறுப்பினர் எ.ஆர். முஹம்மட் பஸ்மீர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு எழுத்துமூல 4பக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
காரைதீவு பிரதேசபைக்குட்பட்ட பிரதேசத்தில் அரசகாணி இல்லாத காரணத்தினால் மடுவம் அமைத்துத்தருவதற்கு தனியொருவர் முன்வந்திருந்தார். அதற்கான அனுமதியைப்பெறும்பொரும் தவிசாளர் கி.ஜெயசிறில் அதனை பிரேரணையாக கடந்த அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.
அதற்கு எதிராக உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் முகா உறுப்பினர்களான எம்.என்.எம்.றனீஸ் எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் காரசாரமாக வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தனர்.
குறிப்பாக உபதவிசாளர் ஜாகீர் 'தனியாருக்கு வழங்கினால் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட மடுவம் போன்று அறுக்கப்படும் மாடுகள் நோய்வாய்ப்பட்டதாகவும் கன்றுத்தாச்சியாகவும் குட்டிமாடுகளாகவும் இருப்பதோடு இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு மாறாக அறுபடுவதாகவும் அதனை சாய்நதமருது ஜூம்ஆ பள்ளிவாசலாலோ மாநகரசபையாலோ கட்டுப்படுத்தமுடியாதுள்ளதாகவும் 'தெரிவித்தார்.
மேலும் 'கன்றுகளை கொத்தி துண்டாக துண்டாக கலப்பதாகவும் நாய்களும் அறுபடுவதாகவும் சுகாதார பரிசோதகரின் உத்தியோகபூர்வ முத்திரை மடுவத்தில் நிற்கும் ஊழியரின் பக்கட்டுக்குள் இருப்பதாகவும் கூறினார்.
இக்கதையாடல்கள் முஸ்லிம் சகோதரர்களை ஏனைய தமிழ்ச்சகோதரர்கள் முன்னிலையில் கேவலப்படுத்தும் விதமாகவும் வயிற்றிலுள்ள குட்டியையும் கொத்தித்தின்னும் ஈனப்பிறவியா முஸ்லிம்கள்? எனச்சிந்திக்கவும் வைக்கலாமல்லவா?
இவ்வாறு ஒழுக்கம் தெரியாதவர்களை கட்சிகளும் மக்களும் பிரதேசசபைக்கு அனுப்பியுள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தை தவறாகப்புரிந்துகொள்ள இதுவழிவகுக்கும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு ஒழுக்கம் தெரியாதவர்களை கட்சிகளும் மக்களும் பிரதேசசபைக்கு அனுப்பியுள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தை தவறாகப்புரிந்துகொள்ள இதுவழிவகுக்கும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.