துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அப்துல்லா மஹரூப் இன்று (14) திங்கட் கிழமை தனது கடமைகளை சர்வமத அனுஷ்டானங்களின் பின் கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி உட்பட பிரதியமைச்சரின் குடும்பஸ்தர்கள் என பலரும் பங்கேற்றார்கள்.