இறக்காமம் அய்மன் கலை மன்றத்திநுடைய மேலங்கி வெளியிட்டு விழா அன்மையில் மன்றத்தின் தலைவரும் தேசாபிமானியுமான எஸ்.எம்.சன்சீர் தலமையில் இடம்பெற்றது.
வைத்தியர் கனி மற்றும் எஸ்.எல்.றசீன் அவர்களதும் அநுசரனையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது கலைஞர்கள் இலை மறை காய்களாக எமது பிரதேசங்களில் இருக்கின்றார்கள் அவர்களை வெளிக்கொண்டுவருவதும் அவர்களை கலைத்துறையில் ஊக்குவிப்பதும் ஒவ்வொரு கலை மன்றங்களினதும் செய்பாடாகும். அதேபோன்று இளைஞர் யுவதிகளையும் நாங்கள் இந்த கலைத்துறைக்குள் கொன்டுவருவதில்தான் எமது பாரம்பரிய கலை கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் இன்நிகழ்வில் உரை இகழ்த்தினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மன்ற்றத்திற்க்கு தங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்கிய உறுப்பினர்களுக்கும் மேலங்கிகள் வழங்கி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.