கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்பு விசேட திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரோஷன் அக்தரின் வேண்டுகோளுக்கினங்க
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள்இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்
கல்முனை 15ம் வட்டாரத்தில் உள்ள வீதிகள் குறிப்பாக, பள்ளி ஒழுங்கை 5ம் குறுக்கு வீதி , தைக்கா வீதி 1ம் குறுக்கு வீதி , தோணா வீதியின் ஒரு பகுதி என்பன கொங்றீட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரோஷன் அக்தார் ஆகியோருக்கு பொது மக்கள் தனது நன்றியினை தெரிவித்தனர்.