தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையினால் துவிச்சக்கர வண்டிகள்; மற்றும் உலருணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.

ஏ.எம்.றிகாஸ்-
ட்டக்களப்பு - சவுக்கடி மற்றும் தளவாய் ஆகிய பிரதேசங்களில் வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களைச்சேர்ந்த ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு- தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையினால் துவிச்சக்கர வண்டிகள்; மற்றும் உலருணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு மாகாண அவைத்தலைவர் அருட்திரு எஸ்.எஸ். தெரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முன்பள்ளி மாவட்ட பணிப்பாளர் எஸ். சசிகரன் உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.
வில்லியம் ஓல்ட் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் மூலமாக இம்மாணவர்களுக்கு இப்பொருட்கள் வழங்ககப்பட்டன.

இதனால் தூரப்பிரதேசங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் சிரமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

சவுக்கடி மற்றும் தளவாய் ஆகிய பிரதேசங்களில் பாடசாலையின் அமைவிடம் தொலைவில் காணப்படுவதனால் பல மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக அறியப்பட்டதையடுத்து
இவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -