திருகோணமலை கந்தளாய் பகுதியில் கணவனினால் தனது மனைவிக்கு கத்தியினால் குத்தியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு கணவனினால் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவில் இன்று(22) காலை வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:
இன்று(22) காலை 6.00மணியளவில் வீட்டிலிருந்து ஆடைதொழிற்சாலைக்கு வேலைக்குசெல்லும் போது கணவனான 35 வயதுடைய சுபியான் இன்ஸான் என்பவர் தனது மனைவிக்கு சராமரியாக கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடும்ப பிரச்சினைகள் காரணமாக இக்கத்தி குத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
கணவனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு,சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.