இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சந்திப்பு.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை நேற்று (16) புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து இராணுவம் மற்றும் பொலிசார் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதற்கான வோண்டுகோளை விடுத்தார்.

விஷேடமாக அம்பாறை மாவட்டத்தில் இராணுவம், பொலிசார் கையகப்படுத்தியுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதன்போது விரிவாக பேசப்பட்டது. வட மாகாணத்தில் இப்பிரச்சினைக்கு நீண்டகாலமாக தீர்வு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் தாமதமாகுவதனால் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதற்கான உடனடித் தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக பாதுகாப்புச் செயலாளர் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதந்து ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர் மற்றும் படை அதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர் மட்ட கூட்டம் ஒன்றை கூட்டி சில முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -