ஆசிய பவுண்டேசன் நிறுவனம் நேற்று(16) புதன்கிழமை சம்மாந்துறை வலயத்திலுள்ள 71 பாடசாலைகளுக்கும் 15ஆயிரம் நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளது.
இந்த வைபவம் நேற்று சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலய மண்டபத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் அன்ரனி நல்லதம்பி பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நிபுணர் எம்.வை.எம்.வலீத் ஸ்ரீலங்காரெலிகாம் நிறுவன கல்முனைப்பிராந்திய முகாமையாளர் பிரான்சிஸ் நியுட்டன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
அங்கு பிரதம அதிதி அன்ரனி உரையாற்றுகையில் சிறந்த தலைவர்கள் நல்ல வாசிப்பவர்களாகவிருப்பர் . நல்ல வாசிப்பாளர்கள் சிறந்த தலைவர்களாகவிருப்பார்கள்.
நாம்வழங்கும் இந்து நூல்களை மாணவர்கள் வாசிக்கும்படி வழங்கவேண்டும். அவர்கள் வாசித்து கிழித்து அழித்தாலும் பரவாயில்லை. வாசிக்கக்கொடுங்கள்.
கல்முனை ஆதாரவைத்தியாசலை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை தென்கிழக்குப்பல்கலைக்கழகம் கல்முனை மாகரசபை நூலகம் போன்றவற்றிற்கு நேற்று வழங்கினோம்.
இன்று இங்கு வழங்குகிறோம். நாளை அக்கரைப்பற்று வலயத்திற்கு செல்வோம்.
இவ்வாறு கல்விக்கூடங்களுக்கு மாத்திரமல்ல நூலகங்களுக்கும் பயனுள்ள நூல்களை வழங்கிவருகிறோம்.என்றார்.
ஆசியபவுண்டேசன் பிரதிநிதிகளான அன்ரனி மற்றும் வலீத் அகியோர் பொன்னாடை போர்க்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
71பாடசாலை அதிபர்களுக்கும் மேடையில்வைத்து நூல்ப்பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி. வி.நிதர்சினி நன்றியுரையாற்றினார்.நிகழ்ச்சியை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்துவழங்கினார்.
முன்னதாக அதிபர் சங்கத்தலைவர் முத்துஇஸ்மாயில் அதிதிகள் ஆகியோர் உரையாற்றினார்.