மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்களின் முதலாவது பொதுமக்கள் சந்திப்பு கடந்த புதன்கிழமை (16.01.2019) மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் நடைபெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டனர்.
எல்லாத் துறைகளிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுநரை சந்தித்தனர்.
"அவர்களது பிரச்சினைகளில் பலவற்றிற்கு அவரால் உடனடி தீர்வுகளை வழங்க முடிந்ததுடன் ஏனையவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு சிபார்சு வழங்கவும் முடிந்ததெனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
பாடசாலை அனுமதி தொடர்பாக பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளே அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது எனச் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட முறையில் ஆளுநரைச் சந்திக்க விரும்பும் பொதுமக்கள் புதன்கிழமைகளில் நடைபெறும்
பொதுமக்களின் பிரச்சினைகளுகு்காக . “என் கதவுகள் எப்போதும் பொதுத் தினத்தில் மட்டுமல்லாது ஏனைய நாட்களிலும் பொதுமக்களின் அவசர விடயங்களுக்காக திறந்தே இருக்கும் என அவா் தெரிவித்தாா்.