வானக்காடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரை கேற்ப தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொள்வதற்காக கூரை தகரங்கள் 31.01.2019 வழங்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ. ப.கல்யாணகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு புத்திர சிகாமணி,மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் க. நகுலேஸ்வரன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன் ,சிவனேசன் ,மஞ்சுளா, நிர்மலாதேவி உட்பட தோட்ட முகாமையாளர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 29ஆம் தேதி வானக்காடுதோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுடைய பணிப்புரைக்கேற்ப மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக புதிய வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.