தேசபந்து தென்னகோன் அவர்களுக்கான பாராட்டு வைபவம்


மேல்மாகாண பொலிஸ் பணிப்பாளர் ,கம்பஹா மாவட்ட DIG கௌரவ தேசபந்து தென்னகோன் அவர்களின் ( Western Province & Gampaha district Senior DIG ) பதவியுயர்வை கௌரவித்து அவரைப்பாராட்டும் முகமாகவும் அவரது பதவியால் சமூகத்தில் நல்ல பல சேவைகள் இடம்பெற வேண்டுமெனவும் அதற்கு தனக்கு கிடைக்கப்பெற்றுள்ள மேல்மாகாண பொலிஸ் பணிப்பாளர் பதவியுயர்வு துணையாக இருக்கவேண்டும் எனவும் வேண்டி துஆ பிரார்த்தனை வைபவம் ஒன்றும் இன்று (13) மாலை 7.00 மணிக்கு கஹட்டோவிட்ட பாதிபிய்யா தக்கியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவரோடு கம்பஹா மாவட்ட பொலிஸ் சிரேஷ்ட அயரதிகாரி SSP முதித புஸ்ஸல்லாவ அவர்களும்,கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் அத்தனகல்ல பொலிஸ் பிரிவு உயரதிகாரியான கௌரவ SP இந்திக சில்வா அவர்களும்,நிட்டம்புவ ,வீரங்கொல்ல பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகளும் மேலும் பல பாதுகாப்பு உயரதிகாரிகளும் இந்த பாராட்டு நிகழ்வுக்கு வருகை தரவுள்ளனர்.
எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்கு ஊரிலுள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் ,ஊர்ஜமாஅத்தவர்களும் ,புத்திஜீவிகளும்,பொதுமக்களும் கலந்து இந்த பாராட்டு வைபவத்தை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
இந்த பாராட்டு விழாவை கஹட்டோவிட்ட பாதிபிய்யா சங்கத்தின் கலீபா மௌலவி எம்.என்.எம் இஜ்லான் அவர்களுடைய தலைமையின் கீழும் இச்சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாதிபிய்யா இளைஞர் சங்கத்தினரும் ,பொலிஸ் கொமிஷனின் பணிபுரியும் எமதூரைச்சேர்ந்த ஹர்ஷான் அவர்களதும் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வைபவத்தின் போது ஊர் அயலூர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் ,இந்த நிறுவனத்தின் பெயரால் நடைபெறும் வைபங்களின் போது சமீப காலமாக எதிர்கொள்ளும் ஊரின் வழமைக்கு எதிரான பாதுகாப்பு தரப்பினரின் சவால்கள், தடைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு உரிய சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொள்வதும் மற்றுமொரு நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பித்து ஊரின் கௌரவத்தையும் பிரதேச பொலிஸ் அதிகாரிகளின் கௌரவத்தையும் நன்மதிப்பையும் காப்பாற்றுமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

தகவல்
ஹர்ஷான் உட்பட பாதிபிய்யா இளைஞர் அமைப்பு
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -