ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போராத்தின் 61 மற்றும் 62வது செயலமா்வுகள்

அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போராத்தின் 61 மற்றும் 62வது செயலமா்வுகள் நேற்று(01.12.2018) சனிக்கிழமை மாவனல்லை சாஹிராக் கல்லுாரியில் ஆயிசா சித்தீக்கா பெண்கள் கலாசாலையிலும் முழு நாள் ஊடகக் கருத்தரங்கை நடாத்தியது. அத்துடன் மாவனல்லையை ச் சோந்த 6 சிரேஸ்ட ஊடகவியலாளா்களையும் கௌரவித்தது.
மாவனல்லை ஆயிசா சித்திகாவில் 180 மாணவிகளும் மாவனல்லை வலயத்திற்குட்பட்ட 7 பாடசாலைகளின் உயா் தர மாணவ மாணவிகள் 180 பேர்களும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வினை மாவனல்லை சாஹிரா பழைய மாணவா் அமைப்பின் ஊடகச் சங்கம் ஏற்பாடுகளை வழங்கியிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா தலைவா் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நாட்டில் அனுபவம் வாய்ந்த கலைவாதி கலீல், அதிபரும் சிரேஸ்ட அறிவிப்பாளாருமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி, சிரேஸ்ட ஊடகவியலாளா் தாஹா முசம்மில், விடிவெள்ளி ஆசிரியா் எம்.பி.எம். பைருஸ், ஊடகவியலளா் பேரோஸ், சிரேஸ்ட ஊடகவியலாளா் அமீர் ஹசைன், எங்கள் தேசம் ஜெம்சித், ஊடகவியலாளா் சாதிக் சிகான் அஷ்ரப் ஏ சமத், விரிவுரைகள் மற்றும் கேள்வி பதில்கள் மாணவா்களுக்கான இலக்ரோணிக் ஊடகம், அறிவிப்புத்துறை, பத்திரிகைகளுக்கு செய்தி எழுதுதல், மொழி அறிவு, பொது அறிவு நவீன உலகில் சமுக சேவை ஊடகம் பற்றிய செயலமா்வுகள் காலை 09.பி.பகல் 05.00 மணிவரை நடைபெற்றது.
பிற்பகல் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவமும் மாவனல்லையைச் சோ்ந்த 6 ஊடகவியலாளா்களும் கௌரவிக்கப்பட்டனா். இந் நிகழ்வில் பலஸ்தீன் நாட்டுக்கான இலங்கைத் துாதுவா் சுஹைா் ஹம்துல்லாஹ், பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் சாா்பாக அவரின் பாரியாா் ரீசா ஹம்துல்லாஹ், முன்னாள் அமைச்சா் அதாவுட செனவினரத்தின, இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா், பழைய மாணவா் சங்கத்தின் தலைவா், கல்லுாாியின் பிரதி அ்திபா்களும் மற்றும் ஊாா் பிரமுகா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இதே வேளை சாஹிராக் கல்லுாாியல் இடம்பெறும் நிகழ்வின் போது ஊடகத்துறை சாா்ந்த கேகாலை மவாட்டத்திக்கு பெருமை சோ்த்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மற்றும் தென்றல் அலைவரிசை முன்னாள் பணிப்பாளா் மா்ஹூம் நுாரணியா ஹசன், சிரேஸ்ட ஊடகவியலாளா் மர்ஹூம் உயன்வத்தை ரம்ஜான், நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியா் என்.எம் அமீன், வசந்தம் சுயாதீன் தெலைக்காட்சி செய்தி ஆசிரியா் சித்தீக் ஹணிபா, மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் அமீா் ஹூசைன் ஆகியோறும் சாஹிரா பழைய மாணவா் ஊடக சங்கத்தினரால் பாராட்டி அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். அத்துடன் கல்லுாாியின் நுாலகத்திற்கு புரவலா் ஹாசிம் உமரினால் ஒரு தொகுதி நுால்களும் கல்லுாாியின் பிரதி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -