மஹிந்தவிடம் கோரிக்கைவிடுத்துள்ள சு.கட்சி உறுப்பினர்கள்
உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொந்தரவு கொடுக்காமல், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளனர்.
எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் 7ஆம் திகதி அளிக்கப்படும் வரை, பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் எண்ணம் தனக்கு கிடையாது என்று, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கூறும்படியும் அவர் கூறியுள்ளார்.
பதவியில் நீடிப்பதால், மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் விமர்சிப்பார்கள் என்றும் தன்னை விமர்சிக்க மாட்டார்கள் என்றும் அவர், தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், பாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டால், தான் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று மகிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனால் அவராகவே பதவி விலகும் முடிவை எடுப்பார் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.