கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த மீலாதுன் நபி விழா இன்று செவ்வாய்க்கிழமை சந்தை கட்டிடக் தொகுதியில் நடைபெற்றது.
சந்தை வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மௌலவி ரி.ஆர்.நௌபர் அமீன் மார்க்க சொற்பொழிவாற்றியதுடன் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு மீலாத் கந்தூரியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சத்தார், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன், சந்தை வர்த்தகர் சங்க செயலாளர் ஏ.எல்.கபீர், மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இன்ஸாட், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் அஸீஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர்.