அப்துல்சலாம் யாசீம்-
தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா நகர் பகுதியில் ஹலீம் நற்பணி மன்றத்தினால் இன்று(20) பல் வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வுகள் ஹலீம் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும்,சமூக சேவையாளருமான எம்.எச் அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்றன.
இதன் போது முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள சிறுவர்களுக்கிடையேயான போட்டி நிகழ்சிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தம்பலகாமம் பிரதேச மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளான ஏ எம் முஸம்மில், ஏ எச் சுகத், மற்றும் ஹிஜ்ரா கிராம அபிவிருத்தி சங்கத்தின் உபதலைவர் ஏ சீ நஜீமூதின் உட்பட நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.