சில எம்பிமார் உயிரிழப்பதற்கு வாய்ப்புள்ளது- அமைச்சர் மஹிந்த அமரவீர

ற்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலமைக்கு சபாநாயகரே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவையை அல்லது பிரதமரை நியமிக்கவோ அரசாங்கத்தை கலைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கே அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் என்பவர் நடுநிலையானவராகவும் பக்கச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் தீர்மானங்களை அவரால் விமர்சிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.தெரண
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -