நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு


பைஷல் இஸ்மாயில் –

கில இலங்கை வை.எம்.ஏ.பேரவை மற்றும் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. இணைந்து நடாத்தியசர்வதேச நீரிழிவு தின நிகழ்வும், நடைபவனியும், நஞ்சற்ற உணவு வலயப் பிரகடனச் செயலமர்வும் நிந்தவூர்அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரின்வழிநடாத்தலின் கீழ் நேற்று (17) அட்டாளைச்சேனையில் வை.எம்.எம்.ஏ தலைவரும், அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் கே.டி.சி.எஸ்.குமாரதுங்க கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி காலை 8.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வழியாக மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற இலவச வைத்திய சேவையையும் ஆரம்பித்து வைத்தனர்.

அங்கு நடைபெற்ற இலவச வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு இரத்தப் பரிசோதனை, உயர் குருதி அமுக்கம் மற்றும் அழுத்தம், தொற்றா நோய் தொடர்பான வைத்திய பரிசோதனைகளை மற்றும் ஆலோசணைகளை பெற்றுக்கொண்டடு அதற்கான இலவச மருந்து வகைகளையும் பெற்று பயனடைந்தனர்.

நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர்தலைமையிலான வைத்தியக் குழுவினரால் இந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை, தேசிய பாடசாலை, டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு தலா 50 வீதம் மருத்துவ தாவரங்களும் இலங்கைஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் கே.டி.சி.எஸ்.குமாரதுங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்அலி, அகில இலங்கைவை.எம்.எம்.ஏ.பேரவையின் போதைப்பொருள் திட்டத்தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர், அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் கே.எல்.சுபையிர், அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ செயலாளர் ஏ.எல்.கியாஸ்தீன்,பொருளாளர் எம்.ஐ.ஹாசீம், உபதலைவர் எம்.எச்.எம்.சுபையிர், உட்பட இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர், பொலிசார் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள்எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -