இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட தென்னைப் பயிர்ச்செய்கை முகாமையாளர் திருமதி பீ.ரவிராஜ் மற்றும் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் தென்னைப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.செல்வகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தென்னை நடுகை பற்றியும் அதனால் கூடிய பயனை எவ்வாறு அடைந்து கொள்வது என்பன பற்றியும், தென்னை மரங்களை வண்டரிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், பசலையிடல் போன்ற விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் தென்னைப் பயிர்ச்செய்கை செய்வோர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், மற்றும் ஏற்கனவே பதிவு செய்தோர்களுக்கு பராமரிப்பு நிதி மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் வருகைதந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஜ்மா கிழக்கு அர் ரஹ்மா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேசத்திலுள்ள ஏறாளமான தென்னைப் பயிர்ச் செய்கையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


