சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதருக்கு கிழக்கு மாகாண வித்தகர் விருது-படங்கள்


ருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவருக்கு வித்தகர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு 2018-10-27ஆம் திகதி மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது இதன் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதி நாள்; நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இவருக்குப் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் கூத்து, கலை இலக்கியம், ஆக்கஇலக்கியம், நாடகம்,பல்துறை, இசைத்துறை, கிராமியக்கலை, சிற்பம், கிராமியப்பாடல், அயுர்வேதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 13 பேருக்கு இந்த வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -