இந்த இணைவு பிணையுமா? பிரியுமா?



எஸ். ஹமீத்-
ல்ஹம்து லில்லாஹ்... ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் இதயங்களுக்குள் தேன் கலந்து பால் வார்க்கப்பட்டது போன்ற ஒரு நிகழ்வு இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவில் நிகழ்ந்திருக்கிறது. கீரியும் பாம்பும் போல் பகைமை பாராட்டி வந்த இலங்கையின் இரு பெரும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அக்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பகையைப் புகையாய் ஊதித் தள்ளிவிட்டு, இரண்டறக் கலந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்!

ஆனாலும் மக்கா நகர சந்திப்பில் இந்தப் புகைப்பட ஒற்றுமைக்கு அப்பால், இத்தலைவர்களும் உறுப்பினர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும் எத்தகைய முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அது சம்பந்தமான செய்திகளை அறிந்து சமூகத்தின் முன்னால் வைப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ்...பொறுத்திருங்கள்.

எனினும், இந்த இணைவு தற்காலிகமாகவன்றி, என்றுமே பிரிக்க முடியாத பிணைவாக இறுகிப் பலம்பெற வேண்டுமென்பதே எமது வேணவா.

இந்த இரு தலைவர்களையும் அவர்களின் கட்சிகளையும் வெறுப்பவர்கள் அல்லது இரண்டுபட்ட ஊருக்குள் கூத்தாடிக் குதூகலிப்போர் சொல்லப் போகும் எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி, இந்த ஒற்றுமையை நமது சமூகம் பேராவலுடன் எதிர்பார்த்தே இருக்கிறது.

அல்லாஹ் போதுமானவன்!













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -