வாழைச்சேனை ஆயிஷா மாணவி இமாஸா கணித புதிர் போட்டியில் சாதனை.

எச்.எம்.எம்.பர்ஸான்-

ண்டி பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் பட்டதாரி ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக அண்மையில் நடாத்தப்பட்ட கணித புதிர் போட்டியில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.ஐ.எப். இமாஸா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.ஐ.எப். இமாஸா இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி தேசிய ரீதியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த போட்டியில் பங்குபற்றி சாதனை புரிந்த மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

குறித்த சாதனை மாணவியோடு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், மாணவியின் தந்தை இல்யாஸ், ஆசிரியர்களான ஜே.எம்.நியாஸ், எம்.ஐ.றியாஸ் ஆகியோர்களை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -