இந்த வன்முறை காரணமாக சபாநாயகர் கரு ஜெயசூரியா பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைய பெரும் சிக்கல் எழுந்த காரணத்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்பு பொலிஸ் படை ஒன்று இறக்கப்பட்டு அவர்களின் துணையுடன் சபாநாயகர் சபைக்குள் நுழைந்தார்.
அப்போது மஹிந்த தரப்பினர் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாறுமாறாக தாக்குதல் நடத்தினர்.
அதுமட்டுமன்றி ஒரு உறுப்பினர் மிளகாய் தூளை நீரில் கரைத்து , சபாநாயகருக்கு பாதுகாப்பளித்த பொலிஸார் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு உறுப்பினர்கள் மீது தெளித்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இந்த காடைத்தனமான தாக்குதல் இலங்கை மக்களை அன்றி வெளிநாட்டு தரப்பையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இவ்வாறு மிளகாய் தூள் கரைசல் தாக்குதல் நடத்தியவர் மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் புளத்வல்கெ பிரசன்ன ரணவீர என்பது அடையாளம் காணப்பபட்டிருந்தது. இவர் கம்பஹா மாவட்ட பாராளும்னற உறுப்பினர்.
இவர் வெறுமனே தரம் 7 வரைக்கும் கல்வி பயின்றவர் எனவும் இவரின் ஆரம்ப தொழில் பேருந்து சாரதி எனவும் உண்மை வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை கல்வியறிவு பற்றிய தேவை குறித்து பரவலாக ஆராயப்பட்டு வரும் நிலையில் , பாராளுமன்ற வன்முறை இதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.