அபு யஹ்யா-
கத்தாரில் லிமோசின் எனப்படும் தனியார் வாடகை வண்டிகளை வைத்துக்கொண்டு அதிகமானவர்கள் தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். ஊபர் மற்றும் கரீம் போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கான பதிவுகளைச் செய்து வாடிக்கையாளர்களைப் பெற்றுக் கொடுத்து அதன் மூலம் அவர்கள் 25 வீத கொமிசனைப் பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் கத்தார் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தில் லிமோசின் வாகங்கள் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச்சென்றால் 3000 ரியால் தண்டப்பணம் அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே லிமோசின் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கு சென்று பயணிகளை ஏற்றுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கத்தார் பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர்.
அத்துடன் ஊபர், கரீம் போன்ற பயணிகளை ஒப்பந்தம் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் கொமிசனுக்காக முறையற்று செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே லிமோசின் கம்பனிகளின் சாரதிகள் அவதானமாக இருத்தல் நன்று.