3 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையை வந்தடைந்த லஹுரு மத்துஷங்க!

மாலைத்தீவில் கடந்த 3 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க நேற்று (22) இரவு இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த லஹிரு மதுசங்கவை அவரது குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். இதனை அடுத்து லஹிரு மதுசங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

லஹிரு மதுசங்க இலங்கையை வந்தடைந்த வேளை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் லஹிரு மதுசங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைத்தீவு சென்றிருந்த நிலையில் குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து கடந்த 3 வருடங்களான அந்நாட்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைத்தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லஹிரு மதுசங்கவை அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா சந்தித்திருந்ததோடு, நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -