மட்டக்களப்பு சம்பியணாக ஆண்கள் பிரிவில் கடல் மீன் கழகம், பெண்கள் பிரிவில் ரவானா கழகம் தெரிவு
ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாணத்தில் Beach Volleyball விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின்
அணுசரனையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” இறுதி மாவட்ட நிகழ்வு நேற்று( 29 ) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி சார்பாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை உள்ளடக்கிய கடல் மீன் அணியும், பெண்கள் அணி சார்பாக வாழைச் சேனை பிரதேச செயலகத்தினை உள்ளடக்கிய ரவானா கழகமும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவதாதன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந், மேலதிக அரச அதிபர் (காணி) திருமதி நவரூபரன்ஞனி , மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் போன்றோர்கள் பங்கேற்று பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தனர்.