அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

நஜிமுடீன் எம்.ஹஷான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30-09-2018) கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களின் நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் பணிமனை கிளைக் காரியாலயத்தை வாழைச்சேனையில் திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடுகளுக்கு தகுந்த தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாழைச்சேனை (ஐந்தாம் வட்டாரத்தில்) பலநோக்குக் கூட்டுறவுச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. அத்துடன் மாவடிச்சேனை செம்மண்ணோடையில் நீண்டகாலமாக தரக்குறைவாய் காணப்பட்ட பாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய கொங்ரீட் பாதைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.

குறிப்பிட்ட இந்நிகழ்வுகள் கல்குடா தேர்தல் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிநடத்தலின் பேரிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -