ஆலயங்கள் அறப்பணிசெய்வதில் அக்கறை காட்டவேண்டும்!

காரைதீவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் வேண்டுகோள்!
காரைதீவு நிருபர் சகா-
லயங்கள் புனிதமானவை. அவை வெளிப்படைத்தன்மையாக இயங்குவதோடு மட்டுமல்லாமல் அறப்பணிசெய்வதில் அக்கறை காட்டவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் வேண்டுகோள்விடுத்தார்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலய சேனாதிராச வம்சப்பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்றுமுன்தினம் (13) சனிக்கிழமை பகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டரீதியாக புதிய நிரந்தர நிருவாகசபை தெரியும்வரையில் இடைக்கால தலைமைத்துவ சபையொன்றைத் தெரிவுசெய்து அதனூடாக தற்காலத்திற்கேற்ப புதிய திருத்திய யாப்பைத் தயாரிக்க வழிவகைசெய்யவேண்டும்.
சேனாதிராச வம்சப்பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று (13) சனிக்கிழமை பகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது சந்தானத்தவர் ஏகோபித்தரீதியில் மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.

கூட்டத்திற்கான அழைப்பை காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் ஆலயத்தின் மூன்று தர்மகர்த்தாக்களுக்கும் எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில் ஆலய தர்மகர்த்தாக்கள் கப்புகனார் கங்காணி நிருவாகசபை உறுப்பினர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் சந்தான பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்கால நிருவாகசபையினர் எனக்கூறப்படும் தர்மகர்த்தாக்கள் அடங்கிய ஒருசாரார் தாம்சமுகமளிக்கமுடியாததன் காரணத்தை தமது வழக்கறிஞர் பே.பிரேம்நாத் மூலம் பிரதேசசெயலாளருக்கு அறிவித்திருந்தனர். அதன் காரணமாக தர்மகர்த்தாக்கள் அடங்கலான ஒருசாரார் வருகைதரவில்லை.
எனினும் 3வம்சத்தவர் அடங்கிய சேனாதிராச சந்தானத்தின் பெரிய தொகையினர் கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தனர்.

சந்தானரீதியாக பலரும் தம்பக்க நியாயங்களை பலரும் அங்கு விலாவாரியாக ஆதாரங்களுடன் தெரிவித்தனர்.
ஊழலற்ற புதிய நிருவாகசபையைத் தெரிவுசெய்ய பிரதேசசெயலாளர் தமது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தமது பூரணஆதரவைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரதேசசெயலர் வே.ஜெகதீசன் இறுதியாகக்கூறுகையில்:
இது ஆலோசனைக்கூட்டம் மட்டுமே. இதில் இருசாராரும் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருசாரார் வரவில்லை. நான் இந்த இருசாராரில் ஒரு சார்புமில்லை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும்.
யாப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கு அத்தியாவசியமானது. இப்படிப்பட்ட முரண்பாடுகள் உருவாகின்றபோது அதுதான் சட்டம். அதுதான் ஆலயத்தை சிறப்பாக முரண்பாடின்றி வழநடாத்திச்செல்ல உறுதுணையாகவிருக்கும்.
ஆனால் இங்கு பாரம்பரிய ஆலயத்தில் உள்ளதாகக்கூறப்படும் யாப்பு 1969இல் உருவாக்கப்பட்டு 1995இல் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் இருக்கின்ற யாப்பின்படியாவது நடக்கவில்லை என்றும் தான்தோன்றித்தனமாக அராஜகமாக நடப்பதாக இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நிதி மோசடிகள் நிருவாகசீர்கேடுகள் பற்றியெல்லாம் பலவித கருத்துக்கள்முன்வைக்கப்பட்டன.
இங்கு தங்களால் கூறப்பட்ட கருத்துக்களை உள்வாங்கியவனாக எனது அதிகாரத்திற்குட்பட்டவகையில் உரிய தீர்வைபெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். நாம் யாருக்கும் ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. நடுநிலையான அதிகாரிகள். எனவே நீதி நடக்கும் என்றார்.

சந்தானத்தவர் மீண்டும் கோருகையில்:
தங்களின் அறிவித்தலை மதியாமல் சட்டவிரோதமாக வெறும் 30பேருடன் கடந்த 7ஆம் திகதி நடாத்தப்பட்ட பொதுச்சபைக்கூட்டத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்கவேண்டும். அன்றிலிருந்து எந்த நிதிநடவடிக்கைகளையும் மேற்கொள்ள இடமளிக்கக்கூடாது. இப்போது அனுப்பட்டிருக்கின்ற சட்டத்தரணி அறிவித்தல் பெறுவதற்காக ஆலயப்பணத்தில்தான் செலவழிக்கப்பட்டிருப்பதாகஅறிகிறோம்.

ஆலயபணத்தில் வழக்குப்பேச அவர்கள் எத்தனிக்கிறார்கள். அதற்கு இடமளிக்கக்கூடாது. நாம் எந்தச்சந்தர்ப்பத்திலும் ஆலயத்தை நீதிமன்றுக்குக் கொண்டுசெல்லமாட்டோம் . இடைக்காலசபையை அமைக்க ஆவனசெய்யவேண்டும் என்றனர்.
பிரதேசசெயலர் பதிலளிக்கையில்: இது நீண்டகாலப்பிரச்சினை. சரியான யாப்பில்லை. பலபிரச்சினைகளi முன்வைத்துள்ளீர்கள். குற்றச்சாட்டுக்களைச்சுமத்தியுள்ளீர்கள். இந்தநிலையில் ஒருநாளுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது.முடிந்தவரை தங்கள் வம்சத்தவரின் ஆலோசனைகளைப்பெற்று தீர்வுக்குவரலாமென்று நம்புகின்றேன்.என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -