நிசாம்தீன் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என‌ அவுஸ்திரேலியா நீதி ம‌ன்ற‌த்தால் விடுவிப்பு


மைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவின் உற‌வுக்கார‌ராண‌ நிசாம்தீன் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என‌ அவுஸ்திரேலியா நீதி ம‌ன்ற‌த்தால் விடுவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து உல‌கில் இன்ன‌மும் உண்மைக்கு இட‌முண்டு என்ப‌தைக்காட்டுகிற‌து. 
அவுஸ்திரேலியாவில் க‌ல்வி க‌ற்கும் நிசாம்தீன் ஐ எஸ் ஸுட‌ன் தொட‌ர்புள்ள‌வ‌ர் என‌ எவ‌னோ ஒரு இனவாதி சொன்ன‌ முறைப்ப‌ட்டின் அடிப்ப‌டையில் அவ‌ர் ப‌ய‌ங்க‌ர‌வாதி என‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார். அத‌ன் பின் ந‌ம‌து நாட்டின் ப‌ல‌ இன‌வாதிக‌ள் பார்த்தீர்க‌ளா இல‌ங்கை முஸ்லிம்க‌ளும் ஐ எஸ் ப‌ய‌ங்க்ர‌வாதிக‌ள் என‌ ஊட‌க‌ங்க‌ளில் ஒப்பாரி வைத்த‌ன‌ர். ந‌ம‌து நாட்டின் சில‌ முஸ்லிம் அவ‌ச‌ர‌ குடுக்கைக‌ள் கூட‌ இது விட‌ய‌த்தில் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவையும் இழுத்து மோச‌மாக‌ எழுதின‌ர்.
ஒருவ‌ர் மீது குற்ற‌ம் சாட்டினால் அவ‌ர் வெளிநாட்ட‌வ‌ராக‌வும் இருந்தால் அவ‌ரை விசாரிக்குமுன்பே கைது செய்து விட்டு பின்ன‌ரே விசாரிப்ப‌துதான் உல‌க‌ நாடுக‌ளின் நிய‌தியாக‌ உள்ள‌து. ஒருவ‌ர் ச‌ந்தேக‌த்தின் பேரில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌தற்காக‌ அவ‌ரை குற்ற‌வாளி என‌ கூற‌ முடியாது.
அதே போல் சில‌ வெளிநாடுக‌ளில் முஸ்லிம்க‌ள் பொய் குற்ற‌ச்சாட்டின் அடிப்ப‌டையில் விசார‌ணை இன்றி நீண்ட‌ கால‌ம் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில் அவுஸ்திரேலிய‌ நீதிம‌ன்ற‌ம் இது ப‌ற்றி விரைவாக‌ விசார‌ணை செய்து தீர்ப்ப‌ளித்திருப்ப‌த‌ற்காக‌ அவுஸ்திரேலிய‌ அர‌சுக்கு இல‌ங்கை உல‌மா க‌ட்சி பாராட்டு தெரிவிக்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -