திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமிய மட்டத்தில் இயங்கி வரும் சமூக நிறுவனங்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) தம்பலகம பிரதேச செயலகத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹரூப் அவர்களினால் வழங்கப்பட்டது.
ஐந்து சமூக நிறுவனங்களுக்கு தலா 50000 ரூபா பெறுமதியான கதிரைகள் இதன் போது வழங்கப்பட்டன.
நிகழ்வின் பின் உரையாற்றிய அப்துல்லா மஹரூப் எம்.பி
தம்பலகாமப் பிரதேசத்துக்கு அபிவிருத்திகளை இட்டுச் செல்ல இம் முறை அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அபிவிருத்திகளை துரிதமாக முன்னெடுக்கவும் எதிர் வரும் காலங்களிலும் அபிவிருத்திகளை கனிசமான அளவு கொண்டு வருவேன்.
இப் பிரதேசத்தில் மேய்ச்சல் தரை இல்லாமையால் கால் நடை வளர்ப்பாளர்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். இந்த பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
இவ் நிகழ்வில் தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
