சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஹம்மத் பலீல் முஹம்மத் முஹம்மத் ஜெஸ்றி, புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகள் பெற்று புலமைப் பரிசிலுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.
இவர், மாளிகைக்காடு - கிழக்கு யூ.கே.எம். பலீல் மற்றும் யூ.எல். ஹுஸைமா தம்பதிகளின் புதல்வராவார்.
இம்மாணவனை வாழ்த்துவதோடு, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், வழிகாட்டல் செய்த ஆசிரிய ஆலோசகர் ஏ. சகறூன் ஆகியோர்களுக்கு கல்விச் சமூகத்தினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
