'புத்தகம் எனது உற்ற நண்பன்' எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களின் புத்தகங்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று (14.10.2018) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
யின் உதவிப் பொதுச்செயலாளர் சகோதரி ரிஸானா ஷிமாஸின் திட்ட முன்மொழிவின் பிரகாரம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்பு மா நகர சபை உறுப்பினர் மொஹமத் ஸபீன் அவர்களின் விஷேட திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக "Colombo Our City" என்ற சிவில் சமூக அமைப்பின் நடத்தாளர் டாக்டர் சுஜாதா கமகே மற்றும் பொது நூலக நூலகர் வருனி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பல்வேறு பாடசாலைகளிலிருந்து தரம் 3 முதல் 8 வரையிலான சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் 149 மாணவ மாணவிகள் இதில் கலந்து பயன் பெற்றனர். தரம் 3 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு சித்திரம் தீட்டும் போட்டியொன்றும், தரம் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நூலகத்தில் வாசித்த கதையொன்றை வைத்து ஒரு குருநாடகம் நடிக்கும் போட்டியொன்றும் இதன் போது நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் உற்சாகத்தோடு கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு புத்தகங்களும் இறுதியில் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் புத்தகங்களோடு தங்களது தொடர்பை வலுப்படுத்திக்கொண்டது மட்டுமல்லாது பொது நூலகத்தின் செயற்பாடுகளை புரிந்துகொண்டதுடன் பொது நூலகத்தில் தமக்கான அங்கத்துவ படிவங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் அடுத்தக்கட்டமாக தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான நிகழ்வு எதிர்வரும் 2018.10.28 ஆம் திகதி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.







