மொஹமட் செயிட் என்ற மாணவனுக்கு கௌரவம்

அஷ்ரப் ஏ சமத்-
பிராண்ஸ் நாட்டில் உள்ள பாசிலோனா உதைப்ந்தாட்ட பயிற்சிக்காக 12வயதுக்குட்பட்ட 8 மாணவா்களை தெரிபு செய்து அனுப்புமாறு அந்த நாடு இலங்கை பாடசாலை விளையாட்டு பிரிவினையும் விளையாட்டு அமைச்சினையும் கேட்டிருந்தது. அதற்காக இலங்கையில் உள்ள 12 வயதுக்குட்பட்ட உதைப்ந்தாட்ட ஆர்வமுள்ள 12600 மாணவா்கள் பரிசீலிக்கப்பட்டு 450 பேர் தெரிபு செய்யப்பட்டனா். அதில் தெரிபு செய்யப்பட்டுள்ள 8 மாணவா்களுள் கொழும்பு ஹமித் அல் ஹூசைனியா தரம் 9 ஆம் வகுப்பு மாணவன் மொஹமட் செயிட் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அதனை முன்னிட்டு மேல் மாகாண சபை உறுப்பிணா் அர்சத் நிசாமுத்தீன் கொம்பனி வீதியில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு வைபவமொன்றை நடாத்தினாா் . அதேநேரம் மேல் மாகண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜியும் அம் மாணவனை கொழும்பு பிரதிபா மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் (22) பாராட்டி கௌரவித்தாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -