பொத்துவில் தாயார் வீதியைச் சேர்ந்த அப்துல் காதர் பாத்திமா அஸ்மியா மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் உட்பட நால்வர் கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
பொத்துவில் ஜய்க்கா பகுதியில் இருந்து மாலை நேரம் ஆட்டோவில் தனது இல்லம் திரும்புவதற்காக பொத்துவிலை நோக்கி வரும் வழியில் தான் பயணித்த ஆட்டோவுக்கான எரிபொருள் போதாமை காரணமாக குஞ்சான் ஓடைப் பகுதி வீதிக் கருகாமையில் குறித்த குடும்பத்தினர் இறங்கி வீதியோத்தில் நின்று கொண்டிருந்த பொழுது வேகமாக பொத்துவிலை நோக்கி வருகை தந்த ஒரு கார் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மோதியதால் அந்த இடத்திலே உயிருக்கு போராடிய நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் வைத்து தாயும் இரண்டு பிள்ளையும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வாகனச் சாரதி பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். பொத்துவில் வைத்தியசாலையினைச் சுற்றி பொத்துவில் வாலிபர்கள் குவிந்துள்ளதுடன் வாகனச் சாரதி மது போதையில் பயணித்ததாக கருத்துக்கள் கிடைத்துள்ள நிலையில் குறித்த சாரதியை வைத்திய பரிசோதனைக்கு கொண்டு வருவதில் பொலிசார் தாமதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரணித்த பாத்திமா அஸ்மியா 2001 ஆண்டு பொத்துவில் மத்தி கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.