யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்கிடையே ஒற்றுமையாக இருத்தல் அவசியம். அய்யூப் அஸ்மின் தெரிவிப்பு

எம்.எல்.லாபிர் -

நேற்றைய தினம் (26-09-2018) அன்று வடக்குமாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுடைய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 500 000 .00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்களுக்கான பாடசாலை உபயோகத்திற்கான காலணிகள் (சப்பாத்துக்கள்) வழங்கிவைக்கும் நிகழ்வு யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது.

அங்கு உரை நிகழ்த்தும்போதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்
யாழ்ப்பாணத்திலே மீளக்குடியேறுகின்ற முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் தம்முடைய நகர்வுகளை முன்னெடுத்தல் அவசியமானதாகும். ஆனால் இங்கே இருக்கின்ற ஒரு சிலர் முஸ்லிம் மக்களை தமது விருப்பத்திற்கு அமைவாக பிழையாக வழிநடாத்துகின்றார்கள். எமக்கிடையேயான உறவுகளை சீர்குலைக்கின்றார்கள். மக்கள் ஒரு நேரான பாதையில் செல்லவேண்டும் என்று நாம் எடுக்கின்ற பல்வேறு முயற்சிகளுக்கும் குறுக்கே வந்து இடைஞ்சல் தருகின்றார்கள். இத்தகையவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பங்கம்ம் விளைவிக்கின்றார்கள். 

நான் பல இடங்களில் மிகவும் வெளிப்படையாகச் சொல்கின்ற விடயம் ஒன்று இருக்கின்றது. அதுதான் “யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்கிடையே ஒருவரை ஒருவர் எதிரிகளாக நோக்கக் கூடாது” என்பதாகும். அவர்கள் எல்லோரும் ஒற்றுமையானவர்களாக இருத்தல் அவசியமானதாகும்.
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் 2009ற்குப் பின்னர் நம்பிக்கையோடு மீள்குடியேறத் தொடங்கியிருந்தாலும் 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னரே அந்த மக்களுக்கான அரச உதவித்திட்டங்கள் எவ்விதமான தங்குதடைகளுமின்றி எமது மக்களுக்குக் கிடைக்கப்பெற்றன. 

நீங்கள் அரச ஆவணங்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மைகளைக் கண்டுகொள்வீர்கள். இதற்கான காரணம் என்ன; அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் ரீதியான தலைமைத்துவம் அவசியமானது என்பதை எம்மால் கண்டுகொள்ளக்கூடியதாகவிருக்கும். அப்படியான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை எமது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே வழங்கினார்கள். இதனை எமது மக்கள் மனதில் இருத்திக்கொள்தல் அவசியமானதாகும்.
எமது மக்களிடையே அவர்களுக்குப் பொறுத்தமில்லாத அரசியல் செயற்பாடுகளை அறிமுகம் செய்வது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்; தேசியக் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கென்ற கட்சிகள் இருக்கின்றன அவை ஒருபோதும் வடக்கிலே ஆளுகின்ற கட்சிகளாக இப்போதைக்கு வருகின்ற சாத்தியப்பாடுகள் மிகவுமே குறைவாகவே இருக்கின்றது. எனவேதான் தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆளும் அணிகளாக வரக்கூடிய தமிழ்க் கட்சிகளோடு யாழ்ப்பாண முஸ்லிம்கள் இணைந்திருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். அதுவே எமது மக்களுக்கு நன்மையளிக்கும் என்பதும் எமது எண்ணமாகும். என்றும் அவர் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -