கல்குடா பள்ளிவாயல்கள் நிருவாகங்களுக்கு முன்மாதிரியினை காட்டியுள்ள ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகம்…!!



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடா முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து இம்முறை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வியைக் கற்பதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு
பல வருடங்களுக்கு பின்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் இன்று 03.10.2018 ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மாபள்ளிவாயலில் இதுவரைக்கும் கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்றிராத ஒரு வரலாற்ரு நிகழ்வாக இடம் பெற்றது.

பள்ளிவாயல் தலைவரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளருமான அல்- ஹாஜ் எம்.எல்.ஏ.ஜுனைத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது கல்குடா பிரதேசத்தில் இருக்கும் ஏனைய பள்ளிவாயல் நிருவாகங்களுக்கு முன்னுதாரணமான விடயமகவும், பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்கு சமூகம் சார்ந்த ஓர் உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

அரசியலுக்கு அப்பால் பிரதம பேச்சாளராகவும், பிரதம அதிதியாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான ஏ.சீ. அஹார் முகம்மட் அழைக்கப்பட்டு கல்குடா பிரதேசத்தின் நாளைய தலைவர்களை கெளரவித்த விடயமானது கல்குடா சமூகத்திரானல் பாராட்டப்பட கூடிய ஒரு விடயமாக சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் பள்ளிவாயலில் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உலமாக்கள், கல்விமான்கள், அரசியலுக்கு அப்பால் நடு நிலை சிந்தனையாளர்கள் என பலதரப்பட்ட பிரிவினர் ஏனைய அதிதிகளாக அழைகப்பட்டு ஒரு சமூதயத்துக்கு தேவையான கல்வியியல் சம்பந்தப்பட்ட அடிப்படை ரீதியிலான கட்டமைப்பினை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் குறித்த நிகழ்வு இனிதே நிறை வடைந்தமை உண்மையில் பாரட்டப்பட வேண்டிய விடயமாகும்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -