தில்சாத் பைசர் இன்று பாகிஸ்தான் பயணம்!!! (Update)

மருதூரை சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் 
பைசர் தில்ஷாத் அஹமட் 14வது சர்வதேச இளைஞர் ஒன்று கூடலுக்காக பாகிஸ்தான் பயணமாகிறார்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து கிழக்கு மாகாணப் பிரதிநிதியாக கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் பாராளுமன்ற எதிர்க்கட்சி பிரதி அமைப்பாளருமான தில்சாத் பைசர் இன்று பாகிஸ்தான் பயணமாகிறார்.
அல் ஹிக்மத் பவுண்டேஷன் சர்வதேச இளைஞர் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ் அமைப்பானது 1990 ஆம் ஆண்டிலிருந்து இயங்குகின்றது அத்துடன் உலகளாவிய ரீதியில் மனிதபிமான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மை வாய்ந்த நிறுவனமாகவும் மனித நேயத்தை பாதுகாப்பதே இதன் குறிக்கோளாகும்.
மேலும் இவ்வமைப்பானது 62 நாடுகளைச் சேர்ந்த 302 பங்குதாரர்களை உலகளாவியரீதியில் கொண்டுள்ளது. இவ் ஒன்றியத்தின் முக்கிய நோக்கமானது இஸ்லாமிய உலகில் காணப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்புக்களினூடக
நிலையான அபிவிருத்தியை உறுதி செய்வதோடு பலதரப்பட்ட பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னிலை வகிப்பதோடு ஒவ்வொரு வருடமும் ஒன்றியமானது உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய இளைஞர்கள் இடையில் ஒன்றுகூடலை ஏற்படுத்தி பலதரப்பட்ட நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் புரிந்துணர்வு களையும் வளர்ப்பதோடு உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கும் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு தனது நாடுகளில் பிரதேசங்களில் ஏற்படுத்துகின்ற அபிவிருத்திக்கும் ஆலோசனைகளையும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் புரிந்துணர்வுகளை வளர்ப்பதோடு சர்வதேச வெளிப்பாடுகளையும் இவ்வமைப்பு இளைஞர்களுக்காக வழங்குகின்றது‌. இந்த சர்வதேச இளைஞர் மாநாட்டுக்காக அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி பிரதி அமைப்பாளருமான பைசர் தில்ஷாத் அஹமட் இன்று பாக்கிஸ்த்தான் பயணமாகிறார் .
SSDO எனப்படும் சாயந்தமருது சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் தில்ஷாத் மெரைன் உரிமையாளருமான சமூக சிந்தனையாளர் எம்.வை. பைசர் அவர்களின் புதல்வரான தில்சாத், தனது இளவயது முதல் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -