தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

யூ.கே. காலித்தீன்-
தொற்றா நோய் தொடர்பான சுகாதாரம் பேனல் எனும் தலைப்பின் கீழும் சாய்ந்தமருது அரசினர் கலவன் முஸ்லீம் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நசாரின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் நடத்தப்பட்ட தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் பரீசோதனையும் பாடசாலை வளாகத்தில் இன்று (05) இடம்பெற்றது.
இதன் போது உணவுப் பழக்க வழக்கம், போஷாக்கான நிறை உணவுத் தெரிவு தயாரித்தல், பயன்படுத்தும் முறைகள், சுகாதார பழக்கவழக்கம் தொடர்பில் விளக்க மளிக்கப்பட்டதுடன், நீரிழிவு நோய்க்கான இரத்த பரிசோதன, பி.எம்.ஐ. பரிசோதனை என்பனவும் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொற்றா நோய்களான நீரிழிவு, கொலஸ்ரோல், பாரிசவாதம் போன்ற நோய்களின் தாக்கம் இலங்கையில் அதிக சவாலாக மாறிவருவதுடன், இதனால் அதிகமான மரணங்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டன.

உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கம், சுகாதார நடைமுறைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இதனை குறைக்க முடியுமெனவும் இதன் போது ஆலோசனை கூறப்பட்டது.

மேற்படி இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் சுகாதார பரிசோதகர்கள் மருத்துவ ஆய்வூகூட தொழிநுட்ப வியலாளர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -