பல்கலைக்கழக விடயங்கள் சட்டரீதியாக பரிந்துரைக்கப்படும்போது உபவேந்தர் அனுமதிப்பார்.

பேராசிரியர் நாஜீம் 
எம்.வை.அமீர்-
ல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் செயற்படுத்த பதிவாளர், நிதியாளர் மற்றும் ஏனைய சம்மந்ததப்பட்ட அதிகாரிகளால் பல்கலைக்கழகத்தின் சட்டங்கள், நிதிப்பிரமாணங்கள், சுற்றுநிருபங்கள் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு அமைய பரிந்துரைக்கப்படும்போது உபவேந்தர் தங்குதடையின்றி அனுமதிப்பார் என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 20வது வருடாந்த ஒன்றுகூடலும் 2018/2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவும் 2018-09-06 ஆம் திகதி பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர் நாஜீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பந்துகள் மாற்றி விளையாடும் கலாச்சாரத்தை தவிர்த்து அவரவர் அவரவரது கடமைகளை சரிவர செய்வார்களானால் எந்தப்பிரச்சினைகளும் வராது என்றும் உபவேந்தர் தெரிவின்போது சம்மந்தமே அற்றவர்கள் எல்லாம் தங்களது மூக்கை நுழைத்து பல்கலைக்கழகத்தின் நற்பெயரை நாறடித்து வைத்துள்ளதாகவும் அவைகள் அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அதற்காக அவரவர் அவரவரது கடமைகளை சரிவர ஆற்றுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் கூறினார் என சில உண்மையற்ற கதைகள் உலவிவருவதாகவும் அவ்வாறு உபவேந்தர் கூறியிருந்தால் அது எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என்றும் முன்புபோல் அல்லாது உபவேந்தரை சந்திப்பது விடயத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும் தற்போதைக்கு தன்னுடைய அலுவலகத்தில் உள்ள சி.ஏ.ஏ.ஊடாக அனுமதியைப் பெற்று தன்னை சந்திக்க முடியும் என்றும் இவைகளை எல்லாம் சில காரணங்களுக்காகவே தான் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழியர்களின் உரிமைகள் விடயத்தில் மிகுந்த கருசனையுடன் செயற்படுவதாக தெரிவித்த உபவேந்தர், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதனை பார்த்துக்கொடிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிதி விடயங்களில் விடப்படும் தவறுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த உபவேந்தர், பல்கலைக்கழக சுற்றுச்சூழலை பேணுவது விடயமாகவோ சரியான நேரத்துக்கு கடமைக்கு வந்துபோவது விடயமாகவோ தன்னுடன் கலந்தாலோசிக்க எவரும் முற்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஊழியர் சங்கத்தின் தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படுவதாகவும் அதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்கேடுகளை நிவர்த்திக்க ஊழியர் சங்கமும் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக பதிவாளர் எச்,அப்துல் சத்தார் அவர்கள் கந்துகொண்டு உரையாற்றினார்.

ஊழியர் சங்கத்தின் 2018/2019 ஆம் ஆண்டுக்கான நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவானார்கள்:

தலைவராக எம்.எம்.நௌபர் அவர்களும் உப தலைவராக எஸ்.எல்.அஹமட் லெப்பை செயலாளராக எம்.சி.ஏ.கபூர், உப செயலாளர் ஏ.எச்.ஸாஹிருள் இம்தியாஸ் உப செயலாளர் பிரயோக விஞ்ஞான பீடம் எம்.ஏ.றிபாய்ஸ் முகம்மட் பொருளாளர் வை.முபாறக் நலன்புரி இணைச் செயலாளர் ஆண் எம்.எம்.எம்.காமில் நலன்புரி இணைச் செயலாளர் பெண் ஜிப்ரியா நௌபர் உள்ளக கணக்குப் பரிசோதகர் சலீம் றமீஸ் நிருவாக உத்தியோகத்தர்களாக பதிவாளர் பகுதி 1 எம்.சி.றொசான் பதிவாளர் பகுதி 2 ஏ.ஆர்.அஸ்லம் ஸிஹான் நிதியாளர் பகுதி எம்.ரீ.எம்.தாஜுடீன் முகாமைத்துவ வர்த்தக பீடம் ஆஸாத் கலை, கலாச்சார பீடம் யூ.கே.சுல்பிகார் அரபிக் மொழி பீடம் எம்.ஏ.எம்.ஹரீஸ் பிரயோக விஞ்ஞான பீடம் எம்.ரீ.ஹசீர் முகம்மட் தொழில்நுட்ப பீடம் எஸ்.றிபாய்டீன் பொறியியல் பீடம் ஏ.ஜே.எம்.ஹாரிஸ் சாரதி பிரிவு எஸ்.எல்.ஹைதர் பிரதான நூலக பிரிவு எஸ்.எல்.எம்.சுபியான் பாதுகாப்புப் பிரிவு ஏ.ஆர்.ஆப்டீன் ஆய்வுகூட பிரிவு எம்.வை.அமீர் களஞ்சியப் பிரிவு எமஎமஎம்.றம்சீன் பராமரிப்புப் பிரிவு கே.எல்.இப்றாகீம் கியூரேட்டர் பகுதி எம்.ஐ.தாஹீர் நலன்புரி உடற்கல்விப் பிரிவு பி.ரீ.ராசீக் வெளிவாரி கற்கைகள் பிரிவு எம்.என்.முஸ்னி ஆகியோர் தெரிவானார்கள்.

நிகழ்வின்போது பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர் இப்ராலெப்பை நிதி உதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 





















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -