மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா கோலாகலமாக ஆரம்பம்

க.கிஷாந்தன்-
“தேயிலை வளர் நாடு கண்டோம் ஏற்றமிகு வாழ்வு காண்போம்” என்ற தொனிப்பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா அட்டன் நகரில் 22.09.2018 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டது இவ்விழா அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சர், கண்டி காரியாலய இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அரச முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாகித்ய விழா மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார, தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
40 தமிழ் மற்றும் முஸ்லீம் பாடசாலைகளின் மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அட்டன் டி.கே.டபிள்யூ. மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு “தேயிலை வளர் நாடு கண்டோர்” என்ற பெயரில் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதோடு, துறைசார்ந்தோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -