அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 59 வது நினைவு தினம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 59 வது நினைவு தினம் திஹாரிய முஸ்லிம் அங்கவீனர் நிலைய கேட்போர்கூடத்தில் புதன்கிழமை(26) காலை அனுஷ்டிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிலையத்தின் சர்வதேச ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் வரவேற்பதையும் அவருக்கு ஞாபகார்த்த விருது வழங்குவதையும் அங்கவீனர் நிலைய சிறுமியொருவருக்கு பகல்போஷணமும் மூதாட்டியொருவருக்கு உலர் உணவுப் பொதியும் முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படுவதையும் நிலையத்தின் சிறார்கள் வரவேற்பு கீதம் இசைப்பதையும் நிலைய முகாமையாளர் எம்.எஸ்.எம். நிஸாம், தலைவர் ஆர்.எம்.றிஸ்வான், கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர்களையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...