தேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி!



காரைதீவு சகா-
விளையாட்டுத்துறை அமைச்சு வருடாந்தம் நடாத்திவரும் மாகாணங்களுக்கிடையிலான அகிலஇலங்கை மட்ட ஹொக்கி போட்டியில் கிழக்கு மாகாணஅணியாக காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி முதன்முதலாகக் கலந்து கொண்டது.
இப்போட்டி கொழும்பு ரொறிங்ரன் மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இத்தேசிய போட்டியை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி அதன் தலைவர் பொலிஸ் உததியோகத்தர் தவராசா லவன் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகி பின்னர் கிழக்குமாகாணத்திலும் தெரிவானது.
அதன்பலனாக கிழக்குமாகாண அணியாக இளம்வீரர்களைக்கொண்ட காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி தேசியமட்டப்போட்டிக்கு வரலாற்றில் முதற்றடவையாகத் தெரிவாகி பங்கேற்றது.
வடக்கு மாகாண அணியுடன் மோதியதில் இறுதிநேரத்தில் ஆக 3 கோல்
வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இலங்கையின் 9மாகாணங்களிலிருந்தும் 9 தெரிவான மாகாண ஹொக்கிஅணிகள் பங்கேற்றன. முதலில் நொக்கவுட் முறையில் போட்டிகள் நடாத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் மத்தியமாகாணஅணி முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -