அண்மையில் நீதி அமைச்சின் மத்தியஸ்த்த சபைகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் கல்முனை மத்தியஸ்த சபையின் 20வது வருட பூர்த்தி வைபவமும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
கல்முனை மத்தியஸ்த சபை தவிசாளர் ஜனாப் முகம்மத் ஆதம் அவர்களின் தலமையில் கல்முனை வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலதிக செயலாளர் ஜனாப் ஏ.மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களும்,20 வருட சேவையை பூர்த்தி செய்த உறுப்பினர்களுக்கும் ஞாபகச் சின்னம் வழங்கி பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கல்முனை மத்தியஸ்த்தர்சபை உறுப்பினர்களும், பிரதேச செயலாளர்கள்,பொது மக்களும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.