முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் முதலாவது நினைவு தினக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு -10, ஸ்ரீ சங்கராஜமாவத்தையில் அமைந்துள்ள அல்-ஹிதாயா மஹா வித்தியாலய பஹார்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பீ.எம். பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் , விசேட பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவும் உரையாற்றினாா்.
சிறப்புப் பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜீ.ஹுசைன் இஸ்மாயில் கலந்து கொண்டு உரையாற்றினார். விசேட அதிதிகளாக இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுபைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸயீத் மற்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி.எம்.இக்பால் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அவர்களும் கலந்து கொண்டதுடன் நினைவு உரையும் நிகழ்த்தினார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் அஸ் ஸெய்யித் மசூர் மௌலானா அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




