இது பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சியில் பங்குபற்ற வைப்பதோடு தீர்மானம் எடுக்கும் செயல்முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் கைபேசி ஊடகவியல் பயிற்சியானது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்' என பேராசிரியரும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் தவிசாளருமான பத்மசிறீ வணிகசுந்தர அண்மையில் கண்டியில் இடம் பெற்ற இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வளர்களுக்கான Mobilie storytelling (MoJO) பயிற்சிப்பட்டறையில் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிப்பட்டறையில் திருகோணமலை,யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளம் ஊடகவியலாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
இந்த பயிற்சியின் போது பங்குபற்றுனர்களுக்கு படக்காட்சிகளின் வகைகள்,நேர்காணலை படம் பிடிக்கும் உத்திகள், கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி காட்சிகளை பதிவு செய்தல், new mobile apps, Editing, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தல் போன்ற தலைப்புக்களில் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் பத்மசிறீ வணிகசுந்தர மேலும் உரையாற்றுகையில் இந்த புதிய முயற்சியின் நோக்கமானது துடிப்பான இளம் ஊடகவியலாளர்களை கைப்பேசி ஊடகவியல் துறையில் பயிற்றுவிப்பது, அவர்களின் மூலம் ஓரங்கட்டப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்துவது, அவற்றை பொறுப்பான அதிகாரிகளுடன் சமர்ப்பிதன் மூலம் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது என்பன உள்ளடங்குகின்றன.
எமது நிறுவனத்தின் குறிக்கோள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறான இளைஞர் குழுக்களை உருவாக்குவதாகும். அந்த வகையில் தற்போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை அனுசரணையுடன் 3 மாவட்டங்களில் இந்த செயல்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இது ஏனைய மாவட்டங்களுக்கும் மிக விரைவில் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான பங்களிப்பைச் செய்ய முடியும் என எமது நிறுவனம் உறுதியாக நம்புகின்றது எனக் கூறினார்.
இந்தப்பயிற்சியின் நிறைவில் பயிற்றப்பட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் தொழிநுட்ப வழிகாட்டலின் கீழ் 30 கதைகளை உருவாக்கவுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு#MojoLk மற்றும் www.Ldjf.org என்ற வலைத்தளத்தை நாடவும்.